தனது சாரதிக்கு கொரோனா தொற்று இருப்பதாக அறிந்திராத சந்தர்ப்பத்தில், தான் வாகனத்தில் முகக்கவசம் இல்லாமல் பயணித்ததாலேயே தனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தாலும், அந்த சமயங்களில் தான் சரியாக முகக்கவசம் அணிந்ததால் ஆரோக்கியமாக இருக்க முடிந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தனிப்பட்ட அனுபவத்தின்படி, மக்கள் தங்கள் முகக்கவசங்களை ஒரு கணம் கூட அகற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளவதாக அவர் தனது முகப்புத்தகத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.







No comments