Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

17 ஆயிரம் உயிரை காப்பாற்ற ஒக்டோபர் 03 வரை முடக்கத்தை நீடியுங்கள் !




கொழும்பில் டெல்டா வைரஸ்தான் நூற்றுக்கு 100 வீதம் உள்ளதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவரான விசேட வைத்தியர் பத்மா குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தியர் பத்மா குணரத்ன மேலும் கூறியுள்ளதாவது, 

“டெல்டா வைரஸ் பிறழ்வடைந்து, மேலும் ஒரு திரிபு தற்போது கொழும்பில் பரவிக்கொண்டிருக்கின்றது.

இந்தத் திரிபு ஏனைய மாகாணங்களுக்கும் பரவிக்கொண்டிருக்கின்றது என்பதில் எந்ததொரு சந்தேகமில்லை.

அதாவது, உலக சுகாதார ஸ்தாபனத்தின் எதிர்வுகூறலின்படி, எதிர்வரும் செப்டெம்பர் 17 ஆம் திகதி வரை நாட்டில் முடக்கநிலையை அமுல்ப்படுத்தினால் தான் 7 ஆயிரத்து 500 உயிர்களைப் பாதுகாக்க முடியும்.

மேலும்  ஒக்டோபர் 3 ஆம் திகதி வரை முடக்கநிலையை அமுலாக்கினால், மேலும் 10 ஆயிரம் உயிர்களைப் பாதுகாக்க முடியும் என அரசாங்கத்துக்கு அறிக்கை ஒன்றின் ஊடாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், தற்போயை சூழ்நிலையில் வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியுமா என்பது சந்தேகமாகவே இருக்கின்றது.

இதற்கு காரணம், பெரும்பாலான இடங்களில் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படுகின்றது. ஆகையினால் அனைவரும் பொறுப்புடன் செயற்பட்டால் மாத்திரமே உரிய பாதையை நோக்கி பயணிக்க முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments