Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

பொலிஸ் நிலையத்திலிருந்த வாகனங்களின் பாகங்களை விற்ற பெண் காவலர் கைது!




காவல் நிலையங்களில் விபத்துக்கள் மற்றும் வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆண்டு கணக்கில் துருப்பிடித்துக் கிடப்பதை பார்த்திருப்போம். அவை பல்வேறு வழக்குகளோடு தொடர்புடையது என்பதால், அவற்றை பாதுகாப்பது போலீஸாரின் கடமை என்பதால், அதற்கென தனி அதிகாரியை நியமித்து கண்காணிப்பது வழக்கம். அப்படி பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட பெண் காவல் அதிகாரி ஒருவர் மும்பை காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் இருந்த உதிரி பாகங்களை விற்பனை செய்து சம்பாதித்துள்ளார். மும்பை அருகில் உள்ள வசாய் காவல் நிலையத்தில் களஞ்சிய காப்பாளர் பொறுப்பில் மங்கள் கெய்க்வாட் என்ற தலைமை காவலர் நியமிக்கப்பட்டார்.ww.tamilnews1.com 

அவரிடம் காவலர்கள் பறிமுதல் செய்யும் அனைத்து பொருட்கள் பற்றிய விபரங்களை பராமரிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. கெய்க்வாட் தனது பொறுப்பில் காவல் நிலையத்தில் இருந்த வாகனங்களிலிருந்து உதிரி பாகங்களை திருடி முஸ்தாக் என்ற பழைய இரும்பு வியாபாரியிடம் விற்பனை செய்து பணம் சம்பாதித்து வந்துள்ளார்.ww.tamilnews1.com 

வாகனங்களை அப்படியே திருடினால்தான் தெரிய வரும் என்றும், உதிரிபாகங்களை திருடினால் தெரியாது என்ற எண்ணத்தில் இது போன்று செய்துள்ளார். வாகன உதிரி பாகங்கள் மட்டுமல்லாது பணம், நகைகள், குளிர்சாதன பெட்டி, வாஷிங்மெஷின் போன்றவற்றையும் போலீஸ் நிலையத்தில் இருந்து திருடி விற்பனை செய்துள்ளார்.

இது போன்று மொத்தம் ரூ.26 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி விற்பனை செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது. ஒரு முறை காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து உதிரி பாகங்களை திருடிய போது கையும் களவுமாக கெய்க்வாட் பிடிபட்டார். அவர் மீதான குற்றச்சாட்டை தொடர்ந்து பணியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ww.tamilnews1.com 

அப்பெண் காவலர் மீது திருட்டு தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று இன்ஸ்பெக்டர் கல்யான் தெரிவித்தார். பழைய இரும்பு வியாபாரி முஸ்தாக் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். வேலியே பயிரை மேய்ந்த கதையாகிவிட்டது என்கிறார்கள் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும்.

நன்றி :- விகடன் 

ww.tamilnews1.com 

No comments