போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்த சந்திரிக்கா என்பவர் 27 இலட்ச ரூபாய் பணத்துடனும் , 11 கிராம் ஹெரோயினுடனும் பொலிஸ் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
www.tamilnews1.com
களனி பகுதியை சேர்ந்த 25 வயதான குறித்த பெண்மணி , கிரிபத்கொட , ராகம , மற்றும் களனி பகுதிகளில் நீண்டகாலமாக ஹெரோயின் போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
www.tamilnews1.com
அது குறித்து தகவல் அறிந்த விசேட அதிரடி படையினர் இன்றைய தினம் கிரிபத்கொட பகுதியில் வைத்து குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
அதன் போது , அவரிடமிருந்து 26 இலட்சத்து 65ஆயிரத்து 100 ரூபாய் பணமும் , 11 கிராம் ஹெரோயின் போதை பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
www.tamilnews1.com
சந்தேக நபரை கிரிபத்கொட பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
www.tamilnews1.com
No comments