கோவிட்-19 வைரஸுக்கு எதிராக விட்டமின் சி, விட்டமின் டி மற்றும் அசிட்டிக் அமில (II) உப்பு ஆகியவற்றை நோயெதிர்ப்புத் தடுப்பு மருந்துகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று கொழும்பு மருத்துவ பீடத்தின் மருத்துவப் பேராசிரியர், மருத்துவ வல்லுநர் பிரியதர்ஷனி கலப்பட்டி தெரிவித்தார்.
எனினும் காய்ச்சல் மற்றும் உடல் வலி போன்றவற்றுக்கு பரசிட்டமோல் தவிர்ந்த வேறு எந்த மருந்தையும் பரிந்துரைக்க முடியாது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இன்று சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் , கோவிட்-19 வைரஸிலிருந்து பாதுகாப்பதாகக் கூறி, அதிக விலைக்கு விற்கப்படும் சில மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு
மருத்துவ வல்லுநர் பிரியதர்ஷனி கலப்பட்டி வலியுறுத்தினார்.
அத்துடன் , நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு கோவிட்-19 தடுப்பூசி பெறுவதற்கு எந்த தடையும் இல்லை என்றும், அத்தகைய நோயாளிகளுக்கு கோவிட்-19 தடுப்பூசி பெறுவது அவசியம் என்றும் கூறினார்.
No comments