யாழ்ப்பாணம் கொழும்புத்துறை கடலில் குளிக்க சென்ற முதியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொழும்புத்துறை உதயபுரம் பகுதியை சேர்ந்த இமானுவேல் செபஸ்டியன் (வயது 65) எனும் முதியவரே உயிரிழந்துள்ளார்.
முதியவர் வழமை போன்று இன்றைய தினமும் அதிகாலை 5.30 மணியளவில் கடலில் குளிக்க சென்றுள்ளார். குளிக்க சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடி சென்ற போது , அவர் உயிரிழந்த நிலையில் கடற்கரையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்ததுடன் , சடலத்தை பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாண போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
No comments