வவுனியா பட்டக்காடு பகுதியை சேர்ந்த இளம் தாயும் அவரது 7 நாட்களேயான குழந்தையும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனோ தொற்றுக்கு இலக்கான குறித்த பெண் வவுனியா ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த வாரம் சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டார்.
குழந்தையும், தாயும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த நிலையில் , தொடர்ந்தும் வவுனியா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் இருவரும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளனர்.
No comments