கோவிட்-19 நோயினால் உயிரிழந்தோரின் சடலங்கள் களுபோவில மருத்துவமனையில் குவிக்கப்பட்டதாக கூறி சமூக வலைதளங்களில் போலி ஒளிப்படத்தை வெளியிட்ட ஒருவர் கொழும்பு குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
நுகேகொடையை சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
போட்டோசொப் மூலம் வடிவமைக்கப்பட்ட போலி ஒளிப்படத்தை கடந்த 16ஆம் திகதி சமூக ஊடகங்களில் அவர் வெளியிட்டார் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது
No comments