Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இரண்டாம் அலகு தடுப்பூசி வழங்கும் பணிகள் யாழில் ஆரம்பம்!


யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 தடுப்பூசியின் முதலாவது அலகைப் பெற்றுக் கொண்டவர்களுக்கான இரண்டாவது அலகை வழங்கும் பணி இன்று திங்கட்கிழமை தொடக்கம் ஆரம்பமாகியுள்ளது. 

வடமாகாணத்தில் கோவிட்-19 தடுப்பு மருந்தேற்றல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 3ஆம் கட்டத்தின் முதலாவது தடவை தடுப்பூசியேற்றும் பணிகள் கடந்த கடந்த ஜூலை மாத இறுதி முதல் நடைபெற்று வந்தன.

அவ்வாறு தமது முதலாவது அலகு தடுப்பூசியினை பெற்றுக்கொண்ட 30 வயதிற்கு மேற்பட்டவர்கள், 18 வயதிற்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கான இரண்டாவது அலகு தடுப்பூசிகள் இன்று  ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி முதல் வழங்கப்படுகிறது.
 
அந்நிலையில் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கீழான ஜே / 111 , ஜே / 112, ஜே / 114 மற்றும் ஜே 122 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்டவர்களுக்கு திருநெல்வேலி முத்துத்தம்பி மகா வித்தியாலயத்தில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

அதேவேளை இரண்டாவது அலகு தடுப்பூசியினை பெற்றுக் கொள்வதற்கு வரும் போது முதல் அலகு தடுப்பூசி பெற்றுக் கொண்டமையினை உறுதிப்படுத்துவதற்காக சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையினால் வழங்கப்பட்ட அட்டையினை எடுத்துச் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.








 


No comments