Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வீடுகளில் இருந்து போராடும் உறவுகள்!


சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று சர்வதேசத்திடம் நீதிகோரி முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வீடுகளில் இருந்தவாறே அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
 
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று ஆகஸ்ட் 30 முல்லைத்தீவில் தொடர்சியாக நீதிகோரி போராட்டம் மேற்கொண்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கொவிட் 19 பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நிலையால் தத்தமது வீடுகளிலிருந்தபடியே சர்வதேசத்திடம் நீதிகோரி அடையாள கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.
 
ஒவ்வொருவருடமும் காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் பொது இடங்களில் ஒன்றுகூடி பாரிய அளவில் கவனயீர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டு தமது அன்புக்குரியவர்களுக்கான நீதியை கோரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்றைய நாளில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலையிலும் தமது வீடுகளில் நீதிகோரிய வாசகங்களை தாங்கி நீதியின் குறியீடாக மெழுகுதிரி ஒளி ஏத்தி இன்றைய நாளை அடையாளப்படுத்தி சர்வதேச சமூகத்திடம் நீதிகோரி போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
 
நாங்கள் இலங்கை அரசை நம்பவில்லை சர்வதேச விசாரணையே வேண்டும் , காணாமல் ஆக்கப்பட்டவர்கள் திரும்பி வருவது எப்போது ?, உங்கள் இராணுவத்தை நம்பி கையளித்த பிள்ளைகள் எப்படி காணாமலாக்கப்பட்டார்கள்? கால அவகாசம் வேண்டாம் - முறையான நீதி விசாரணையே வேண்டும் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கி இன்றை சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினத்தை அடையாளப்படுத்தி கவனயீர்ப்பை மேற்கொண்டனர்.
 
முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தம் முடிவடைந்து 2009 முதல் பன்னிரெண்டு வருடங்களாக தமது உறவுகளை தேடி போராடிவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கடந்த 2017 மார்ச் மாதம் எட்டாம் திகதிமுதல் தமது பிள்ளைகளை தம்மிடம் ஒப்படைக்குமாறும் அவர்களுக்கான நீதி வேண்டியும் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்து சர்வதேச சமூகத்திடம் நீதிகோரி இன்று நான்கு வருடங்களை கடந்து 1635 ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

படங்கள் :- குமணன் (முல்லைத்தீவு ஊடகவியலாளர்)








No comments