தாய் எந்த நாளும் இதிலையே இருக்கிற அவரின் படங்களை தொட்டு ''என்ர ராசா எங்க இருக்கிறாய் உனக்கு என்ன செய்தாங்கள் சித்திரவதை செய்தாங்களா ? உயிரோட இருக்கிறியா ? இல்லையா /எனக்கு ஒண்டும் தெரியேல்ல'' எண்டு சொல்லி அழுதபடி. நானோ எவ்வளவோ புத்தியள சொல்லி ஆறுதல் படுத்த பார்ப்பேன். அப்பிடியே சொல்லி சொல்லி அவாவும் போய் சேர்ந்திட்டா. அதுக்கு பிறகு நானும் தனிச்சு போனன்.
ஆயர் அல்லைப்பிட்டி பங்கை பொறுப்பெடுக்குமாறு இவரை அனுப்பி வைத்தார் . அங்கு போனதிலிருந்து காணாமல் போனார். அவர் காணாமல் போனதிலிருந்து எனக்கு, மனைவிக்கு நோய்கள் வந்திட்டு. ஆரம்பத்தில சலரோகம்தான் வந்தது. கொஞ்சநாளையால கொலஸ்ரோல் வந்திட்டு. பிறசரும் வந்திட்டு. இவளவத்துக்கும் குளுசை போடுறதாலையே எனக்கு பலயீன தன்மை. இது எல்லாத்தயும் பார்த்தா இந்த பிள்ளை இருந்திருந்தா எனக்கு இதெல்லாம் நடந்திருக்காது போல, என்ற எண்ணங்கள் எல்லாம் வரும்.
பிள்ளையை நினைஞ்சு நினைச்சுதான் இந்த நோய்களும் எனக்கு வந்து இன்று அவதிப்படுகின்றேன்.”
இன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினம் அருட் தந்தை ஜிம் பிரவுண் காணாமல் ஆக்கப்பட்டு 15 ஆண்டுகளாக நீதி இல்லை மகனின் பிரிவால் நோயாளியாகிய தந்தை கூறியவையே இது
உரையாடல் & படப்பிடிப்பு :- குமணன் (ஊடகவியலாளர் , முல்லைத்தீவு)











No comments