சீனி தட்டுப்பாடு ஓரிரு தினங்களில் நீங்கிவிடும் எனவும் , அதன் பின்னர் முன்னைய விலைக்கே சீனியை கொள்வனவு செய்ய முடியும் என சதொச தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.
சதொச நிறுவனத்தினால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 5ஆயிரம் டொன் சீனி கொழும்பு துறை முகத்தில் சிக்கியுள்ளமையாலே நாட்டில் திடீரென சீனிக்கு தட்டுப்பாடு நிலவியதாகவும் , தற்போது துறைமுகத்திலிருந்து சீனியை விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமையால் , ஓரிரு நாட்களில் சீனிக்கான தட்டுப்பாடு நீங்கி விடும் என தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை தற்போது நாட்டில் சீனிக்கான தட்டுப்பாடு நிலவுவதனால் தற்போது சீனி 220 ரூபாய்க்கு அதிகமான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







No comments