இந்தியாவிலிருந்து படகு ஒன்றில் யாழ்ப்பாணத்துக்கு கடத்தி வரப்பட்ட சுமார் 41 மில்லியன் ரூபாய் பெறுமதியான 139 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர்.
பருத்தித்துறை கடற்பரப்பில் இன்று காலை 6 மணிக்கு இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
பருத்தித்துறை கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்துக்கிடமான படகு ஒன்றை சோதனையிட முயன்ற போது, சந்தேக நபர்கள் கஞ்சா போதைப்பொருள் பொதிகளை கடலில் வீசியுள்ளனர்.
இருந்த போதிலும் விரைந்து செயற்பட்ட கடற்படையினர் கடலில் வீசப்பட்ட கஞ்சா போதைப்பொருட்களை மீட்டனர். www.tamilnews1.com
அதனை அடுத்து படகில் இருந்த இருவரையும் கைது செய்ய கடற்படையினர் , அவர்களை பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அதேவேளை மீட்கப்பட்ட கஞ்சா போதை பொருள் மற்றும் , படகையும் பொலிசாரிடம் பாரம் கொடுத்துள்ளனர். www.tamilnews1.com
No comments