நயினாதீவில் மரண சடங்கில் கலந்து கொண்ட மூவருக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது. www.tamilnews1.com www.tamilnews1.com
கடந்த திங்கட்கிழமை நயினாதீவில் வயோதிப பெண்மணி திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். www.tamilnews1.com
அவரது மரண சடங்கில் ஊரவர்கள் கலந்து கொண்டிருந்தனர். அந்நிலையில் ஓரிரு நாட்களில் உயிரிழந்தவரின் சகோதரி உள்ளிட்ட சிலருக்கு திடீர் உடல்நல குறை ஏற்பட்டுள்ளது. www.tamilnews1.com
அதனை அடுத்து அவர்கள் வைத்திய சாலைக்கு சென்ற போது , அங்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் மூவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. www.tamilnews1.com
அதனை அடுத்து சுகாதார பிரிவினர் மேலதிக நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளனர். www.tamilnews1.com
www.tamilnews1.com
இதேவேளை திடீர் சுகவீனமுற்று உயிரிழப்பவர்களின் சடலங்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளும் நடைமுறை உள்ள போதிலும் , திங்கட்கிழமை உயிரிழந்த குறித்த வயோதிப பெண்மணியின் சடலத்திற்கு பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை எனவும் , அவர் கொரோனோ தொற்றினால் உயிரிழந்து இருக்கலாம் எனவும் , அவரின் ஊடாகவே மரண சடங்குக்கு சென்றவர்களுக்கு தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என ஊரவர்கள் சந்தேகிக்கின்றனர்.
No comments