Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நல்லாட்சி காலத்தில் நுவரெலியாவில் 52 ஆயிரம் பேருக்கு குடும்பக்கட்டுப்பாடு!


"நல்லாட்சி " என வர்ணிக்கப்பட்ட ஆட்சி காலமான கடந்த 2015 - 2019ஆம் ஆண்டு வரையிலான  கால பகுதியில் நுவரெலியா மாவட்டத்தில்  சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையால் 52 ஆயிரத்து 183 குடும்பக்கட்டுப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

நுவரெலியா மாவட்டத்தில் மக்களை ஏமாற்றி , அவர்களுக்கு குடும்ப கட்டுப்பாட்டுகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் , அது தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

இந்நிலையிலையே கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான கால பகுதியில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையால் 52 ஆயிரத்து 183 குடும்பக்கட்டுப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

லூப்ஸ், மாத்திரை, தடுப்பூசி, ஆண்களுக்கான தூய்மையாக்கி (Male Sterilize - Vasectomy) பெண்களுக்கான தூய்மையாக்கி (Female Sterilize - LRT), உள்ளிட்ட 6 முறைகளின் கீழ், குடும்பக் கட்டுப்பாட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

2015 – 2019 வரையிலான 5 வருடங்களில் மாத்திரம் லூப்ஸ் முறையில் 8,412, மாத்திரை முறையில் 9,307, தடுப்பூசி முறையில் 14,390, ஆண்களுக்கான தூய்மையாக்கி முறையில் 76, பெண்களுக்கான தூய்மையாக்கி முறையில் 7,006, வேறு முறைகளின் கீழ் 12,992 குடும்பக்கட்டுப்பாடுகளும்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.  

அக்கால பகுதியில் மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் இருவர் அந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

No comments