Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பதிவுகளை மேற்கொண்ட பின்னர் ஊசி ஏற்றாது நழுவியவர்களை தேடும் பொலிஸார்


கொ​ரோனா தொற்று தடுப்பூசியை ஏற்றிக்கொண்டதாக தடுப்பூசி அட்டையில், விவரங்களை பதிவு செய்துகொண்டு, தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளாது நழுவியவர்களை தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். விசாரணைகளின் அடிப்படையில் சிலரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

காலி சங்கமித்த மகளிர் வித்தியாலயத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நேற்று (09) முன்னெடுக்கப்பட்டது. அதன் போது அங்கு சைனோர்ஃபாம் முதலாம் மற்றும் இரண்டாம் டோஸ்கள் ஏற்றப்பட்டன.

அங்கு தடுப்பூசி ஏற்றிக்கொள்ள வந்த சிலர், தடுப்பூசி அட்டைகளில் விவரங்களை பதிவுசெய்துகொண்டதன் பின்னர், தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளாமல் நழுவிச்சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த அதிகாரியொருவர் அவதானித்து, பொலிஸாரின்
கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.

இந்நிலையில், தடுப்பூசியையும் செலுத்தாது இவ்வாறு நழுவிச் சென்றவர்கள் தொடர்பில் விசாரணைகளில் இறங்கிய பொலிஸார் சிலரை கைது செய்துள்ளனர். 

No comments