கிளிநொச்சி இத்தாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி முற்றாக சேதமடைந்துள்ளது.
கிளிநொச்சி , பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் இன்றைய தினம் மாலை குறித்த விபத்து சம்பவம் இடப்பெற்றுள்ளது,
கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்துடன் , கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி வேக கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
அதில் முச்சக்கர வண்டி சாரதி காயமடைந்திருந்ததாகவும் , காயத்துடன் அவர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments