அமைச்சர் லொகான் ரத்வத்தையின் கையிலிருந்த துப்பாக்கி வெடித்திருந்தால் விடுதலைப்புலிகள் சந்தேகநபர்களான நாங்கள் அவரை கொலை செய்ய முயன்றதால் பதிலுக்கு அவர் சுட்டார் என கதை கட்டியிருப்பார்கள் என அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தன்னிடம் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் சிறை கைதிகளை நோில் சந்தித்து கலந்துரையாடிய பின் கருத்து தொிவிக்கும்போது இவ்வாறு கூறினார்,
இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது,
உள்ளே சென்றபோது ஊடகங்களில் வந்த அனைத்து செய்திகளும் உண்மை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
லொகான் ரத்வத்தை என்ற அமைச்சர் மதுபோதையில் வந்தார் துப்பாக்கியுடன் வந்தார் என அங்கே இருக்ககூடிய சிறைக்கைதிகள் எங்களிற்கு நேரடியாக தெரிவித்தனர். அவர் மதுபோதையிலிருந்ததால் துப்பாக்கியை எடுத்து லோட் செய்து தன்முன்னால் நீட்டியதாக ஒரு சிறைக்கைதி தெரிவித்தார்.
சற்று பிசகியிருந்தால் அது வெடித்திருக்கும். அது வெடித்திருந்தால், தாங்கள் அனைவரும் விடுதலைப்புலிகள் சந்தேகநபர்கள் என்பதால் அவரை கொலை செய்ய முயன்றதாகவும், பதிலுக்கு அவர் சுட்டதாகவும் கலவரம் நிகழ்ந்ததாகவும் கதை கட்டியிருப்பார்கள் என கைதிகள் எங்களிடம் தெரிவித்தனர். என தெரிவித்தார்.
அதேவேளை சிறைச்சாலைக்கு கைதிகளை பார்வையிட நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் சென்ற போது , முதலில் அனுமதி வழங்கப்படவில்லை. அவ்வேளை "நாங்கள் மது போதையில் , கைத்துப்பாக்கிகளுடன் ஹெலியில் வந்து இறங்கவில்லை " என சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களுக்கு மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
பின்னர் சபாநாயக்கருக்கு அறிவித்த பின்னரே அவர்களுக்கு கைதிகளை சந்திக்க அனுமதி கிடைத்தது.
அதேவேளை மனோகணேசனுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார உள்ளிட்டோர் இன்று அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றிருந்தனர்.
No comments