கோவிட் தொற்றுக்குள்ளாகி இறப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு யாழ் மாநகர சபையினால் 6500 ரூபா கட்டனம் அறிவிடப்படுகின்றது எனினும் குறித்த கட்டனத்தை செலுத்த முடியாதவர்கள் யாரவது தனிப்பட்டைமுறையில் என்னை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு என்னால் உதவ முடியும் என யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாநகர ஆளுகைக்குள் உள்ள மின்மயான தகனம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக தொற்றுக்கு உள்ளாகி மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது.
யாழ் மாவட்டத்தை பொறுத்தவரையில் கொவிட் தொற்றினால் மரணிப்பவர்கள் யாழ்ப்பாணம் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் அமைந்துள்ள மின் தகன மயானத்தில் தகனம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த மயானம் யாழ் மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்டது.
குறித்த மயானத்தில் நாளொன்றுக்கு 5 உடல்கள் தகனம் செய்யப்பட்டு வருகின்றது. எனினும் எதிர்வரும் 8ம் திகதிவரை சடலங்களை எரிப்பதற்கான முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.இதனால் வைத்தியசாலையில் அதிகளவிலான சடலங்கள் தேங்கி காணப்படுகின்றது.
நாளொன்றுக்கு அதிகளவிலான சடலங்களை எரியூட்டுவதற்கான தகமை எம்மிடம் இல்லை. அதையும் மீறி நாங்கள் ஒன்று இரண்டு சடலங்களை கூடுதலாக ஏரியூட்டும் போது குறித்த ஏரியூட்டி அடிக்கடி பழுதடைய கூடிய சந்தர்ப்பம் காணப்படுகின்றது.
எனவே எரியூட்டும் தகைமையை அதிரித்து எமக்கு என்னுமொரு ஏரியூட்டியை வழங்குமாறு நாம் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். குறித்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் நாளொன்றுக்கு அதிகளவிலான சடலங்களை எம்மால் ஏரியூட்டமுடியும்.
எங்களுக்கு எரியூட்டி வழங்கப்படா விட்டால் கூட பரவாயில்லை வேறு ஒரு மாயணத்துக்காவது வழங்குங்கள் ஏனெனில் யாழ்மாவட்டத்தில் கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களை தகனம் செய்ய தற்பொழுது ஒரே ஒரு இடம்தான் உள்ளது. இப்போதுள்ள நிலமையில் இது போதாது என்றார்.







No comments