அனுராதபுரம் சிறைச்சாலையில் அமைச்சரின் இழிவான செயலுக்கு அவரை பதவியில் இருந்து உடனடியாக நீக்குமாறு எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது உத்தியோகபூர்வ ருவிட்டரில் ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்து பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில் குறிப்பிடப்பட்டள்ளதாவது,
அனுராதபுரம் சிறைச்சாலையில் ஒரு அரசாங்க அமைச்சரின் இழிவான மற்றும் சட்டவிரோத நடத்தையை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்த அருவருப்பான, சட்டவிரோதமான செயல் நம் நாட்டில் இருக்கும் அராஜக நிலைமையை நன்கு எடுத்துக்காட்டுகிறது.
எமது தாய்நாட்டின் அனைத்து குடிமக்களின் மனித உரிமைகளையும் பாதுகாப்பது இந்த அரசாங்கத்தின் கடமையாகும். இந்த சட்டவிரோதமான மற்றும் கேவலமான செயல் நமது நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை மேலும் ஒரு எடுத்துக்காட்டுகிறது. எனவே அமைச்சரை பதவியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதியை கோருகின்றேன் என பதிவிட்டுள்ளார்.







No comments