பூநகரி கௌதாரி முனை வெட்டுக்காடு பகுதியில் சூட்சுமமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 2015 கிலோ மஞ்சளும் 30 கிலோ ஏலமும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த காட்டுப்பகுதியில் மஞ்சள் மற்றும் ஏலக்காய் என்பவை மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக , இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் , இன்றைய தினம் காலை இராணுவத்தினரும் பூநகரி பொலிஸாரும் இணைந்து முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையில் அவை மீட்கப்பட்டன.
அதேவேளை அவற்றை கடல் வழியாக கடத்தி வந்து அப்பகுதியில் பதுக்கி வைத்திருந்தார் எனும் சந்தேகத்தில் ஒருவரை கைது செய்துள்ளனர்.
மீட்கப்பட்ட மஞ்சள் மற்றும் ஏலக்காய் என்பவற்றை பூநகரி பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ள பொலிஸார் , சந்தேக நபரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments