Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வீட்டை இடிக்க வைத்து பணம், நகை மோசடி - அண்டா சாமியார் கைது!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்தவர் சக்தி (37). இவர் விளாத்திக்குளத்திலிருந்து நாகலாபுரம் செல்லும் சாலையில் ‘சக்தி வாராகி” என்ற பெயரில் ஜோதிட நிலையம் வைத்து பல்வேறு பூஜைகள் நடத்தி, சாமியார் போல காட்டிக் கொண்டு ஜோதிடம் மற்றும் குறி பார்க்கும் தொழில் செய்து வந்துள்ளார். பெரிய அண்டாவில் தண்ணீர் வைத்து அதில் அமர்ந்து கொண்டு பூஜை செய்வதால், இவர் அண்டா சாமியார் என்று அழைக்கப்படுவார். இந்நிலையில் தனது குடும்பப் பிரச்னைகளுக்கு பரிகாரம் செய்ய வேண்டி விளாத்திகுளத்தைச் சேர்ந்த பெண் ஜோதிட நிலையத்துக்கு சென்றுள்ளார்.

அவரிடம் சாமியார் சக்தி, உங்களது வீட்டை இடித்து மாற்றியமைத்தால் குடும்பப் பிரச்னை தீரும் என கூறியுள்ளார். அதற்கு அப்பெண் தன்னிடம் பணம் இல்லை என்று கூறவே, சாமியார் சக்தி, அந்தப் பெண்ணிடமிருந்து 2.5 பவுன் செயினை பெற்றுக் கொண்டு ரூ.30 ஆயிரத்தை கொடுத்துள்ளார். அந்தப் பெண்ணும் வீட்டை இடித்துக் கட்டியுள்ளார். அதன் பின்னரும் அவரது குடும்பப் பிரச்னைகள் தீராததால் அவர், மீண்டும் சாமியாரிடம் சென்று கேட்டிருக்கிறார்.

அவர், உங்கள் பிரச்னைகள் தீர, தங்க செயின், மோதிரம் ஆகியவற்றை உருக்கி தங்கமாகவும், பணம் ரூ.3500ம் கொண்டு வந்தால், அதில் நான் தாயத்து செய்து, அதை பூஜையில் வைத்து தருகிறேன் என கூறியுள்ளார். இதனை நம்பி அந்தப் பெண்ணும் 7 கிராம் தாலியில் இருந்த தங்கத்தை உருக்கி அவரிடம் தங்கம் மற்றும் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் அவர் இதுவரை தாயத்தும் கொடுக்கவில்லை, அந்த 7 கிராம் தங்கம் மற்றும் பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இதை கேட்ட அந்தப் பெண்ணுக்கு சாமியார் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் செய்வினை வைத்து கை, கால்களை விளங்காமல் செய்து விடுவதாக கூறியும் சாமியார் மிரட்டி உள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து போலி சாமியார் சக்தியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


நன்றி - தினகரன் (இந்தியா)

No comments