அம்பாறையில் வீதி ஒன்றிலிருந்து கைகள் , கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணொருவர் மீட்கப்பட்டுள்ளார்.
குளியாப்பிட்டி பகுதியை சேர்ந்த ரிமாலி பெர்ணான்டோ (வயது 31) என்ற பெண்ணே மீட்கப்பட்டுள்ளார்.
கைகள் , கால்கள் கட்டப்பட்ட நிலையில் குறித்த வாகனம் ஒன்றில் குறித்த பெண்ணை கொண்டு வந்து வீசிவிட்டு சென்றுள்ளனர். அதனை கண்ணுற்ற பிரதேச வாசிகள் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து பொலிஸார் பெண்ணை மீட்டு அம்பாறை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
குறித்த பெண்ணை கடந்த 28ஆம் திகதி குளியாப்பிட்டி பகுதியில் வைத்து முச்சக்கர வண்டியில் வந்த நபர்களால் கடத்தி செல்லப்பட்டிருந்தார்.
அது தொடர்பில் குளியாப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையிலையே இன்றைய தினம் அப்பெண் வீதியில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.









No comments