சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அநுராதபுர சிறைச்சாலைக்கு கடந்த 12ஆம் திகதி கைத்துப்பாக்கியுடன் தனது நண்பர்களுடன் சென்ற சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சின் முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தே இரு அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் மிரட்டி முழங்காலிட பணித்தார் என குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளது.
அந்நிலையில் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு , அது தொடர்பில் குற்றப்புலனாய்வு துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.







No comments