Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இறக்குமதி கட்டுப்பாடுகளை குறைக்கும் வகையில் நிவாரணம் வழங்குமாறு பிரதமர் அறிவுறுத்தல்


அத்தியவசியமற்ற பொருட்கள் மற்றும் கருவிகளுக்கு இதுவரை விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை முடிந்தளவிற்கு குறைக்கும் வகையில் நிவாரணம் வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (29) மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அத்தியவசியமற்ற பொருட்கள் மற்றும் கருவிகளுக்கு இதுவரை விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக வர்த்தகர்களும் பொதுமக்களும் எதிர்கொண்டுள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு பிரதமர் இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அதற்கமைய மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இது தொடர்பில் தீர்வை முன்வைக்கவுள்ளார்

No comments