காலி கராப்பிட்டிய வைத்தியசாலை சிற்றுண்டி சாலை ஊழியருக்கு இராணுவ வீரர் ஒருவர் சுடுதண்ணீரை முகத்தில் ஊற்றியுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த ஊழியர் கராப்பிட்டிய வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,
பத்தேகம அம்பேகம பகுதியை சேர்ந்த இராணுவ வீரரின் 08 வயது மகன் சுகவீனம் காரணமாக குறித்த வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
மகனுடன் வைத்திய சாலையில் தங்கியுள்ள தந்தையான இராணுவ வீரர் , சிற்றுண்டி சாலைக்கு சுடுதண்ணீர் வாங்க சென்ற போது , சுடுதண்ணீர் வழங்குவதற்கு ஏற்பட கால தாமதத்தால் , ஊழியருக்கு , அவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து ஆத்திரமடைந்த இராணுவ வீரர் சுடுதண்ணீரை ஊழியரின் முகத்தில் ஊற்றியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.







No comments