வெலிக்கடை சிறை வளாகத்தில் லொஹான் ரத்வத்தே உடன் தான் இருந்தாக வெளியான செய்தியை திருமதி இலங்கை அழகி புஷ்பிகா டி சில்வா மறுத்துள்ளார்.
"என் பெயர் தேவையில்லாமல் இதில் இழுக்கப்படுகிறது. இந்த சம்பவம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இராஜாங்க அமைச்சருடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை, அவரை எனக்கு தெரியாது" என புஷ்பிகா தெரிவித்துள்ளார்.
கடந்த 12ஆம் திகதி சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சின் முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தே மது போதையில் தனது நண்பர்களுடன், கைத்துப்பாக்கியுடன் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று அட்டகாசம் புரிந்ததாகவும் , அதன் போது திருமதி இலங்கை அழகி புஷ்பிகா டி சில்வாவும் கூட இருந்ததாகவும் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.






No comments