யாழ்ப்பாணம் கைதடி அம்மாச்சி உணவகத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாண போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அம்மாச்சி உணவகத்திற்கு முன்பாக நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையினால் நீர் குழாய்களை புதைப்பதற்காக தோண்டப்பட்ட குழியின் மண் வீதியோரமாக கொட்டப்பட்டு இருந்த நிலையில் அதனுடன் மோதுண்டே விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.






No comments