மடு பிரதேசத்தில் பிள்ளையார் கோவில் ஒன்று அந்தோனியார் தேவாலயமாக இரவோடு இரவாக மாற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மடு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதேவேளை பிள்ளையார் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட அந்தோனியார் சிலையையும் மீட்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
மடு பரப்புக்கடந்தான் வீதியில், அமைந்திருந்த சிறிய பிள்ளையார் கோவிலில் , பிள்ளையாரை அகற்றி விட்டு அந்தோனியார் சிலை ஒன்றினை மர்ம நபர்கள் பிரதிஷ்டை செய்திருந்தனர்.
அந்நிலையில் சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்ட மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் ஆலயத்திற்கு சென்ற பார்வையிட்டதுடன், பொலிஸாருக்கு அறிவித்து இருந்தார்.
அதனை அடுத்து அங்கு வந்திருந்த பொலிஸார் , விசாரணைகளை ஆரம்பித்ததுடன் , புதிதாக பிரதிஷ்டை செய்த அந்தோனியார் சிலையை மீட்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
அத்துடன் காணாமல் போன பிள்ளையார் சிலையை தேடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் , இச்செயலை செய்த நபர்கள் தொடர்பிலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதேவேளை ஆலயத்தில் மீண்டும் பிள்ளையார் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் தெரிவித்துள்ளார்.
முன்னைய செய்தி https://www.tamilnews1.com/2021/09/89_01360569933.html








No comments