வட்டிக்கு பணம் கொடுக்கும் பெண் அடிகாயங்களுடன் சடலமாக அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.
களுத்துறை, தொடங்கொடவில் வசிக்கும் யசபெல்லா மெராயா விஜேகுணதிலகே (54) என்ற பெண்ணே இன்று செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண், வட்டிக்கு பணம் கொடுப்பவர் என்றும், அவர் தனியாக வீட்டில் வசித்து வருவதாகவும், தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலத்தை மீட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தலையில் காயங்கள் காணப்படுவதனால், குறித்த பெண் படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனும் சந்தேகத்தில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments