Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ்.சங்கானையில் வெள்ள வாய்க்காலில் இருந்து சிறுவனின் சடலம் மீட்பு!


யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் காணாமல் போன சிறுவன் வெள்ள வாய்க்காலில், வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். 

சங்கானை ஸ்தான அ.மி.த. க பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி கற்று வரும் நிரோஜன் ஸ்டீபன் (வயது 6) எனும் சிறுவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளான். 

குறித்த சிறுவன் நேற்றைய தினம் சனிக்கிழமை மதியம் முதல் காணாமல் போயுள்ளான். அதனை அடுத்து குடும்பத்தினர் , அயலவர்கள் பல மணி நேரமாக சிறுவனை அப்பகுதிகளில் தேடியுள்ளனர். 

அந்நிலையில் இரவு 9.30 மணியளவில் , அப்பகுதியில் உள்ள வெள்ள வாய்க்காலில், வெள்ளம் தேங்கியுள்ள நிலையில் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். 

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

No comments