யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் , அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று சனிக்கிழமை இரவு பெற்றோல் குண்டுகளை வீசி விட்டு தப்பி சென்றுள்ளது.
அதனால் வீட்டின் முன் பகுதியில் சிறிது தீப்பிடித்த நிலையில் வீட்டில் இருந்தவர்களால் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் பெரியளவிலான சேதங்கள் ஏற்படவில்லை.
இருந்த போதிலும் வீட்டின் முன் பக்க ஜன்னல் கண்ணாடிகள் சில உடைத்துள்ளன.
சம்பவம் தொடர்பில் வீட்டாரால் யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments