வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது நபரொருவர் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
கொழும்பு முகத்துவாரம் பகுதியில் நேற்று இரவு வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் காயமடைந்த இரு பொலிஸாரும் சிகிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போதைப் பொருளுக்கு அடிமையான நபரை மறித்து சோதனை யிட முற்பட்ட போது , குறித்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பொலிஸார் உத்தியோகஸ்தரை தாக்கினார் எனவும் , தாக்குதலாளியை தாம் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






No comments