நுவரெலியா ராகலை பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு இடம்பெற்ற தீ விபத்தில் வீட்டில் இருந்த ஐவர் உயிரிழந்த நிலையில் வீட்டாரால் வளர்க்கப்பட்ட நாய் அவ்விடத்தில் இருந்து கண்ணீர் விடுவதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
ராகலை பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் இரவு பிறந்த நாள் கொண்டாடிய நிலையில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், பிறந்தநாள் கொண்டாடிய ஒரு வயது குழந்தை , அக்குழந்தையின் தாயான டிவானியா (வயது 32) வயதான தாய் , குழந்தையின் சகோதரியான 11 வயது சிறுமி , குழந்தையின் தாத்தாவான ஆர் . ராமையா (வயது 60) மற்றும் குழந்தையின் பாட்டியான ரா.முத்துலட்சுமி (வயது 55) உள்ளிட்ட ஐவர் தீயில் எரிந்து உயிரிழந்தனர்.
குழந்தையின் தந்தை தீ விபத்து ஏற்படுவதற்கு சற்று முன்னர் வீட்டில் இருந்து வெளியில் சென்றமையால் அவர் உயிர் தப்பியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ராகலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் வீட்டாரால் வளர்க்கப்பட்ட நாய் வீட்டின் முன்பாக தலையை குனிந்த வாறு கண்ணில் நீர் வடிய படுத்த நிலையில் காணப்படுகிறது.
வீட்டிற்கு பலரும் வந்து செல்லும் நிலையில் அது அவ்விடத்தை விட்டு அகலாது கண்ணீர் விட்ட நிலையில், தலையை குனிந்தவாறு சோகத்தில் படுத்துள்ளது.





No comments