புகையிரதம், பேருந்துகள் போன்ற பொது இடங்களிலும், நகர போக்குவரத்து நெரிசல்களிலும் யாசகம் பெறும் நடவடிக்கைகளில் குழந்தைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த நாங்கள் தயங்க மாட்டோம் என இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த தெரிவித்துள்ளார்.
´அனைத்திற்கும் முன்னுரிமை குழந்தைகள்´ என்ற 2021 உலக சிறுவர் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சித் திட்டத்தில் பங்குபற்றிய மகளீர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி அறநெறிப் பாடசாலைகள், கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த த சில்வா இவ்வாறு தெரிவித்தார்.
தெரு குழந்தைகளை கையாள்வதற்கு நீதி அமைச்சகத்துடன் கூட்டு திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், பொலிஸ் உதவியுடன் மிக குறுகிய காலத்தில் முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த நிகழ்வு உலக சிறுவர்கள் தின நிகழ்வுகளின் ஒரு பகுதியாக இருந்தது. சிறுவர் துஷ்பிரயோகம் குறித்த தேசிய தரவுத்தளத்தை அறிமுகப்படுத்துதல், NCPA website (mobile friendly) தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட இந்த இணையதளம் ஆங்கிலத்திலும் தொடங்கப்பட்டது.
வெளிப்புறமாக அடையாளம் காணக்கூடிய குறைபாடுகள் உள்ள குழந்தைகளை அடையாளம் காண்பதற்கான வழிகாட்டி நூல் வெளியீடு, Child fund and the Payment gateway, சார பெய – சம்பவ கல்வி சஞ்சிகை வழிக்காட்டி தொடரினை வெளியீடுதல், சார பெய- சம்பவ கல்வி உளவியல் சமூகவியல் நிகழ்நிலை சான்றிதழ் திட்டம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு குறித்த வீடியோ விளையாட்டுகள் ஆரம்பிப்பது ஆகிய வேலைத்திட்டங்கள் பல அமைச்சரின் தலைமையில் நடைபெற்றன.
இந்நிகழ்வின் போது இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த அவர்களும் மற்றும் அமைச்சின் செயலாளர் குமாரி ஜயசேகர அவர்களும், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபதிரன உட்டப பலர் பங்குபற்றியதுடன் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வளாகத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைவாக மேற்படி நிகழ்வு நடைபெற்றது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
No comments