அநுராதபுர பகுதியில் தனது ஒன்றரை மாத குழந்தையை கோடாரியால் வெட்டிக்கொலை செய்த ஆசிரியரான குழந்தையின் தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அநுராதபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சரவஸ்திபுர பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அப்பகுதியை சேர்ந்த 30 வயதுடைய பட்டதாரி ஆசிரியரான தாய் தனது ஒன்றரை மாத குழந்தையை கோடரியால் வெட்டிக்கொலை செய்த பின்னர் , பொலிஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார்.
குழந்தையை கொலை செய்தமைக்கான காரணத்தை அவர் சொல்லாத நிலையில் , பொலிஸார் அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதேவேளை குறித்த பெண்ணின் வீட்டிற்கு விரைந்த பொலிஸார் குழந்தையின் சடலத்தை மீட்டு , உடல் கூற்று பரிசோதனைக்காக அநுராதபுர வைத்திய சாலையில் சடலத்தை ஒப்படைத்துள்ளனர்.
No comments