Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

5 வருடங்களில் வடக்கு மீனவர்களுக்கு 500 மில்லியன் இழப்பு


கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினையும் கடல் வளங்களையும் அழிக்கின்ற இந்தியக் கடற்றொழிலாளர்களின் இழுவை வலை (ரோலர்) தொழில் முறையை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இவ்விடயத்தில் இந்தியாவின் தீர்க்கமான நடவடிக்கைகளை வடக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்ட இந்திய வெளியுறவுச் செயலாளர் ஹர்ச் ஸ்ரீ வர்தன் ஷ்ரிங்கலாவுடனான சந்திப்பின் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் இந்திய வெளியுறவுச் செயலாளருக்கு தெளிவுபடுத்திய கடற்றொழில் அமைச்சர்,

"இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய அத்துமீறிய சட்ட விரோத தொழில் முறை காரணமாக, 2015 ஆம் ஆண்டில் இருந்து இப்போது வரையான காலப் பகுதியில் வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு சொந்தமான சுமார் 500 மில்லியன் ரூபாய்க்கு அதிக பெறுமதியான தொழில் உபகரணங்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனைவிட பல பில்லியன் ரூபாய் பெறுமதியான கடல் வளங்கள் அழிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த சட்டவிரோதச் செயற்பாட்டினை நிறுத்த வேண்டும் என்பதில் இலங்கை அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்ட போது, இந்த விவகாரத்தினை தீர்ப்பதற்கான முன்வரைபு ஒன்றினை வழங்கியிருந்தேன்.

அந்த முன்வரைபில், இரண்டு நாடுகளும் ´இணைந்த கடல் பாதுகாப்பு குழு´ ஒன்றினை உருவாக்கி பாக்கு நீரினை மற்றும் மன்னார் விரிகுடா பிரதேசத்தின் வளங்களைப் பாதுகாப்பதற்கான தீர்மானங்களை மேற்கொள்ளும் வரையில் சட்ட விரோத தொழில் முறையான இழுவை வலைத் தொழிலை நிறுத்துவது எனவும் சொல்லப்பட்டுள்ளது.

No comments