வீதிகளில் கட்டாக்காலிகளாக சுற்றித்திரியும் நாய்களை பிடித்து இறைச்சியாக்கி உணவாக சாப்பிட்டு வந்த பெண்ணொருவரை பாணந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாணந்துறை பகுதியில் பெண்ணொருவர் தள்ளு வண்டி ஒன்றில் வீதிகளில் திரியும் நாய்களை பிடித்து செல்வதனை சில நாட்களாக அப்பகுதி மக்கள் அவதானித்துள்ளனர்.
அந்நிலையில் அந்த பெண் தான் பிடித்து செல்லும் நாய்களை கொன்று இறைச்சியாக்கி உண்பதை அப்பகுதி மக்கள் அறிந்ததை அடுத்து இன்றைய தினம் அப்பெண் நாய்களை தள்ளு வண்டியில் பிடித்து கொண்டு போன போது , அந்த நாய்களை குறித்த பெண்ணிடம் இருந்து மீட்க முயன்றுள்ளனர்.
அதன்போது , குறித்த பெண் நாய்களை மீட்க முயன்றவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டார். தள்ளு வண்டிலில் இருந்து கத்தி , சுத்தியல் என்பவற்றை எடுத்து நாய்களை மீட்க முயன்றவர்களை தாக்கவும் முயன்றுள்ளார்.
வீதியில் நாய்களை மீட்க முயன்றவர்கள் மீது அப்பெண் தாக்குதலை நடத்த முற்பட்டு , அவ்விடத்தில் அமைதியின்மை ஏற்பட்ட நிலையில் அது தொடர்பில் அறிந்த பாணந்துறை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று குறித்த பெண்ணை கைது செய்து , பொலிஸ் நிலையம் அழைத்து சென்றனர்.






No comments