தாயின் மூன்றாவது கணவரால் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்ட தாயின் முதல் தாரங்களின் இரு பெண் பிள்ளைகள் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முள்ளிவாய்க்கால் வட்டுவாகல் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் தற்போது மூன்றாவது கணவருடன் குடும்பம் நடத்தி வருகின்றார்.
அவரின் முதல் தாரங்களின் இரண்டு பெண் பிள்ளைகளும் தாயுடன் வாழ்ந்து வந்தனர்.
அந்நிலையில் தாயின் தற்போதைய கணவரால் இரண்டு பெண் பிள்ளைகளும் கடந்த 12ஆம் திகதி துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
அது தொடர்பில் அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து , பொலிஸார் தாய் மற்றும் தாயின் மூன்றாவது கணவர் ஆகியோரை கைது செய்ததுடன் , துஸ்பிரயோகத்திற்கு உள்ளான இரு பெண் பிள்ளைகளையும் மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் கடந்த 13ஆம் திகதி முற்படுத்தப்பட்டதை அடுத்து , நீதிமன்று அவர்கள் இருவரையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
அதேவேளை துஸ்பிரயோகத்திற்கு உள்ளான இரு பெண் பிள்ளைகளும் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.






No comments