Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

ஐந்தாண்டுகளுக்கு மேலாக பேச்சளவில் உள்ள கொக்கிளாய் பாலத்தை இந்த அரசாங்கமாவது நிர்மாணிக்குமா ?


வடமாகாணத்தையும் - கிழக்கு மாகாணத்தையும் பிரிக்கும் கொக்கிளாய் கடல்நீரேரி  ஊடாக பாலம் நிர்மாணிக்கும் செயற்த்திட்டம் கடந்த ஐந்தாண்டுகளுக்கு  மேலாக பேச்சளவிலையே உள்ளது. 

அதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எதுவமே கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக முன்னெடுக்கப்படாத நிலை காணப்படுகிறது. 
 
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பகுதியையும் திருகோணமலை மாவட்டத்தின்  புல்மோட்டை பகுதியையும் ஊடறுத்துள்ள கொக்கிளாய்  கடல்நீரேரியை  இணைத்து பாலம் ஒன்றினை அமைப்பதற்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக அவை வெறும் பேச்சளவிலையே உள்ளது. 
 
அதற்கான திட்ட ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் , மூன்று மாத கால பகுதிக்குள் வேலைகள் முடிவடைந்து விடும் என தெரிவிக்கப்பட்டு மூன்றாண்டுகள் கடந்தும் பாலம் அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. 
 
முல்லைத்தீவு மாவட்டத்தையும் , திருகோணமலை மாவட்டத்தையும் இணைக்கும் முகமாக , முல்லைத்தீவு - கொக்கிளாய் வீதியையும் (B 297), புல்மோட்டை - திருகோணமலை வீதியையும் (B 424) இணைத்து  கொக்கிளாய்   கடல்நீரேரி    ஊடாக சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு  பாலம் ஒன்று அமைக்கப்படும் ஆயின் இரண்டு மாவட்டத்திற்கும் இடையிலான பிரயாண தூரம் சுமார் 60 கிலோ மீற்றர் தூரம் குறையும். 
 
கடந்த 2017 - 09 - 04 ஆண்டு அப்போதைய தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி , வெளியிட்டு இருந்த ஊடக அறிக்கையில் " நல்லிணக்க வேலைத்திட்டத்தில் , வடக்கு கிழக்கு மாகாணங்களில் முன்னுரிமையளிக்கப்பட்ட வீதிகள் மற்றும் பாலங்களை புனரமைப்பு செய்வதற்க்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் , அதில் முல்லைத்தீவையும் திருகோணமலையையும் இணைக்கும் கொக்கிளாய் களப்பு பாலமும் புனரமைக்கப்படும் என தெரிவித்து இருந்தார். 

பின்னர் மீள கடந்த 2018-07-10 ஆம் திகதியன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது கூட பாலம் அமைப்பதற்கான அமைச்சரவை  அங்கீகாரம் வழங்கப்பட்டது.  

கொக்கிளாய் பாலம் அமைப்பதற்காக பெறுகை தொடர்பான பெறுகை குழு 2016ம் ஆண்டில் மேற்கொண்ட தீர்மானத்தை அமைச்சரவை அங்கிகரித்திருந்தது. 

செக் குடியரசு.  Bilfingrmceslanysto என்ற நிறுவனத்திடம் 48 மில்லியன் யூரோக்களுக்கு வழங்குவதற்காக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள்  அமைச்சர் என்ற ரீதியில்  அன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அன்றைய  பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி  அமைச்சர் கபீர் ஹாசிமும் சமர்ப்பித்த  கூட்டு பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
 
பின்னர் மீண்டும் 2019 -02 - 12 அன்று அப்போதைய மீள்குடியேற்ற அமைச்சு , கொக்கிளாய் பாலம் அமைப்பதற்கு 09 பில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் , அதேவேளை 41.5 மில்லியன் யூரோ கடனுதவியை செக் குடியரசின் ஏற்றுமதி வங்கி வழங்கவுள்ளதாகவும் அறிவித்தது.  
 
அதேவேளை அன்றைய தினம் (2019 -02 - 12) கொக்கிளாய் பாலம் அமைப்பதற்கான வேலைகளை வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆரம்பித்து உள்ளதாகவும், பணிகளை மூன்று மாத காலத்திற்குள் நிறைவு செய்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் , வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திட்ட பணிப்பாளர் அத்தப்பத்து தெரிவித்து இருந்தார். 
 
பாலம் அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்து மூன்றாண்டுகள் ஆக உள்ள நிலையில் இதுவரையில் பாலம் அமைப்பதற்கான கள நடவடிக்கைகள் எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை. 
 

இன்றும் ஒரு கிலோ மீற்றர் தூரத்தை கடந்து செல்ல வேண்டியவர்கள் சுமார் 60 கிலோ மீற்றர் சுற்ற வேண்டிய நிலையில் உள்ளனர்.
 
பாலம் அமைக்கப்படுமாயின் வெறுமன திருகோணமலைக்கு முல்லைத்தீவுக்கு இடையிலான தூரம் மாத்திரம் குறைய போவதில்லை. யாழ்ப்பாணம் - திருகோணமலை தூரம் , யாழ்ப்பாணம் - மட்டக்களப்புக்கு இடையிலான பிரயாண தூரம் கூட குறைவடையும்.
 
இதேவேளை தற்போது முல்லைத்தீவில் இருந்து திருகோணமலைக்கு செல்ல பயன்படுத்தப்படும்  மணலாறு (ஜனகபுர வீதி) ஊடான காட்டு பாதையூடான வீதியில் பல இடங்களில் பாலங்கள் சேதமடைந்துள்ளமையால் , கனரக வாகனங்கள் , சொகுசு வாகனங்கள் அவ்வீதி ஊடாக செல்ல முடியாத நிலைமை காணப்படுகின்றது ,
 
அதனால் அவற்றில் பயணிப்போர் வவுனியா சென்றே செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது. அதனால் அவர்கள் சுமார் 100 கிலோ மீற்றர் தூரம் வீண் பயணம் செய்ய வேண்டிய நிலை காணப்படுகிறது. 
 
அதேபோல மட்டக்களப்பு செல்வோர் மரதன்கடவை சென்று பொலநறுவை ஊடாகவே மட்டக்களப்புக்கு செல்ல வேண்டிய நிலைமை காணப்படுகிறது. அதனால் அவர்களும் சுமார் 100 கிலோ மீற்றர் தூரம் வீணாக பயணம் செய்ய வேண்டிய நிலைமை காணப்படுகிறது. 
 

எனவே கொக்கிளாய் பாலம் நிர்மாணிக்கப்படுவதன் ஊடாக வடக்கு கிழக்கு மாகாணத்தின் பிரயாண தூரத்தை குறைப்பது மட்டுமல்ல , வடக்கு கிழக்கு மக்களின் போக்குவரத்தினையும் இலகுபடுத்த முடியும். என்பதுடன் வர்த்தக நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றின் போக்குவரத்துக்களும் இலகுவாகும்
 
பல புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி வேலைகளையும் பால நிர்மாண பணிகளையும் முன்னெடுத்து வரும் இந்த அரசாங்கம் ஆவது , கொக்கிளாய் பாலம் அமைக்கும் பணியை முன்னெடுத்தது பாலத்தினை நிர்மர்மானித்து வடக்கு கிழக்கு மக்களின் போக்குவரத்தை இலகு படுத்துமா ? என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

நன்றி :- மயூரப்பிரியன்.

No comments