Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

17 அத்தியாவசிய பொருட்களின் கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டு புதிய வர்த்தமானி வெளியானது!


நாட்டில் சீனி, உருளைக்கிழங்கு, பருப்பு, பொிய வெங்காயம், கோதுமை மா, பால்மா, கோழி இறைச்சி உள்ளிட்ட சுமார் 17 அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டு விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கின்றது. 

அதற்கமைய , இதற்கு முன்னர் வௌயிடப்பட்டிருந்த 07 வர்த்தமானி அறிவித்தல்கள் இந்த புதிய வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இரத்து செய்யப்பட்டுள்ளன.

கடந்த செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி வெள்ளை சீனி மற்றும் சிவப்பு சீனி என்பவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலை இந்த வர்த்தமானியினூடாக இரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் 2020 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் திகதி மைசூர் பருப்பு, பெரிய வெங்காயம் மற்றும் டின் மீன் என்பற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலை, 2020 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் திகதி வெளியிடப்பட்ட கோழி இறைச்சி தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த அதிகப்பட்ச சில்லறை விலை, 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 06 ஆம் திகதி கருவாடு, தேங்காய், உலர்ந்த மிளகாய், மாசி உள்ளிட்ட பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சில்லறை விலை, 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள கடலை, கோதுமை மா, இறக்குமதி செய்யப்படும் பால் மா என்பற்றுக்காக அதிகப்பட்ட சில்லறை விலையும் நீக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள உலர்ந்த நெத்தலி, பாசி பயறு, இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு என்பவற்றுக்கான அதிகப்பட்ச சில்லறை விலையும் நீக்கப்பட்டுள்ளதாக புதிய வர்த்தமானியில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments