Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

பாரம்பரியத்தை பின்பாற்றது மரணதண்டனை தீர்ப்பு!


மரண தண்டனை தீர்ப்பு வாசிக்கப்படும் போது திறந்த நீதிமன்றின்  மின் விளக்குகள், மின் விசிறிகளை அணைக்கப்பட்டு , அனைவரும் ஆசனத்திலிருந்து எழுந்த நிற்க நீதிபதி தீர்ப்பை வழங்கி விட்டு, தீர்ப்பில் கையெழுத்திட்ட பேனாவை உடைப்பது என்பன  மரண தண்டனை விதிக்கப்படும் போது, பாரம்பரியமாகப் பின்பற்றப்படும் நடைமுறையாகும். இவை எவற்றையும் தான் செய்யப்போவதில்லை என இந்த தண்டனை ஒரு பொதுவான தீர்ப்பின் வடிவத்திலேயே இருக்கும் என அறிவித்த தங்காலை மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.ஏ.எஸ் சபுவித, குற்றவாளிக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

கடந்த 2006ஆம் ஆண்டு ஒக்டோபர் 16 அல்லது அதற்கு அண்மித்த காலப்பகுதியில் வலஸ்முல்ல ஹேரவெல பிரதேசத்தில் சுபசிங்க கட்டாடிகே சயிந்தரா என்ற பெண்ணை கொலை செய்த வழக்கில் வலஸ்முல்லையை சேர்ந்த லால் ரஞ்சன் என்பவரைக் குற்றவாளியாக இனங்கண்ட நீதிமன்றம், மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

மரண தண்டனைத்  தீர்ப்பு வழங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி அறிவித்ததாவது,


மேல் நீதிமன்றத்தில் ஒரு குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கும்போது, திறந்த நீதிமன்ற மின் விளக்குகள், மின்விசிறிகள் அணைக்கப்படுகின்றன, நீதிபதி எழுந்து நிற்கிறார்கள், தீர்ப்பு எழுதப்பட்ட பேனா உடைக்கப்படுகிறது. இன்று நான் அந்த பாரம்பரிய செயல்கள் எதையும் திறந்த நீதிமன்றத்தில் செய்யப்போவதில்லை.

 நீதிபதி சரத் அம்பேபிட்டிய படுகொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கு, நாட்டின் மீயுயர் நீதிமன்றமான உயர் நீதிமன்றத்தால், இந்த தீர்ப்பு உறுதி செய்யப்பட்ட பின்னரும் மரண தண்டனை இன்னும்
நடைமுறைப்படுத்தப்படவில்லை. 

அதேபோல் சிலமற்ற வழக்குகளிலும் உயர் நீதிமன்றத்தால் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டாலும், இன்னும் சில குற்றவாளிகள் சட்ட கட்டமைப்பில் உள்ளனர்.

மன்னிப்பு, விடுதலை போன்ற நடவடிக்கை வலயங்களைப் போல், சராசரி மனிதனுக்கு மரண தண்டனை விதிக்கும் போது, பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் மேற்கூறிய செயல்களுக்கு எந்த பொருத்தமும் நடைமுறையும் இல்லை.

அதன்படி, நீதித்துறையில் நிலுவையில் உள்ள மற்ற வழக்குகளின் தீர்ப்பை அறிவிக்கும் வகையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனையை வாசித்தேன் என திறந்த நீதிமன்றத்தில் நீதிபதி அறிவித்தார்.

No comments