Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Tuesday, June 24

Pages

Breaking News

தெல்லிப்பழையில் வீதியில் சகோதரனுடன் பயணித்த பெண் கடத்தல்!




யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளம் பெண்ணொருவர் வானில் வந்த கும்பலால் கடத்தி செல்லப்பட்டுள்ளார். 

தெல்லிப்பழை பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

தெல்லிப்பழை மருத்துவ மனையில் பணிபுரியும் குறித்த பெண் தனது சகோதரனுடன் , மோட்டார் சைக்கிளில் மருத்துவ மனைக்கு சென்று கொண்டிருந்த போது , ஹயஸ் ரக வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று சகோதரன் மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு , பெண்ணை கடத்தி சென்றுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடித்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளனர்.