முல்லைத்தீவு ஊடகவியலாளர் தாக்கப்பட்டதை கண்டித்து , முல்லைத்தீவில் கண்டன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தின் பொருளாளரும் , சுயாதீன ஊடகவியலாளருமான விஸ்வலிங்கம் விஸ்வசந்திரன் மீது நேற்றையதினம் முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து இராணுவத்தினர் பச்சை மட்டையில் முள்ளுக்கம்பி சுற்றி மிலேச்சத்தனமாக தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த ஊடகவியலாளர் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , குறித்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து , முல்லைத்தீவு நகரில் கண்டன போராட்டம் ஒன்று இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது.
No comments