Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Thursday, July 3

Pages

Breaking News

மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமியார் உயிரிழப்பு - மாமனார் படுகாயம்!


தனிப்பட்ட தகராறு காரணமாக பெண் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதுடன், பெண்ணின் கணவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் ஹொரணை - அங்குருவாதொட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தனிப்பட்ட குடும்ப தகராறு காரணமாக தமது மருமகனால் இருவரும் தாக்கப்பட்டதாகவும், அதில் மாமியாரான 58 வயதான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மாமனார் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை அங்குருவாதொட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் 36 வயதுடைய கபுஹேன, கல்பாத பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.கொலைக்குப் பயன்படுத்தியதாக கருதப்படும் ஆயுதம் மற்றும் சந்தேகநபர் வந்த உந்துருளி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

 மேலதிக விசாரணைகளை அங்குருவாதொட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.