Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளர் வைத்தியசாலையில்!


இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான விஸ்வலிங்கம் விஷ்வசந்திரன் எனும் ஊடகவியலாளர் மீதே இராணுவத்தினர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
 
முள்ளிவாய்க்கால் பெயர்ப்பலகையை புகைப்படம் எடுத்த போது , அங்கிருந்த இராணுவத்தினர் அவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். 
 
 அவர் தன்னை ஊடகவியலாளர் என அடையாளப்படுத்தியதுடன் , தான் இராணுவ முகாமையோ , இராணுவத்தினரையோ புகைப்படம் எடுக்கவில்லை என கூறிய போதிலும் இராணுவத்தினர் அவர் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

படங்கள் :- குமணன் (முல்லைத்தீவு ஊடகவியலாளர்)








No comments