Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சாவகச்சேரி நகர சபை பாதீடு ஏக மனதாக நிறைவேற்றம்


சாவகச்சேரி நகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக இன்று நிறைவேறியது. 
 
அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம் தவிசாளர் திருமதி சிவமங்கை இராமநாதன் தலைமையில் இன்று காலை கூடியது. 
 
18 உறுப்பினர்களைக் கொண்ட சாவகச்சேரி நகரசபையில் இன்றையதினம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் தவிர்ந்த அனைவரும் சபைக்கு பிரசன்னமாகியிருந்தனர்.
 
 இதன்போது தவிசாளரால் வரவுசெலவுத்திட்டம் சபையில் முன்வைக்கப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 
 
இதன்போது சபையில் பிரசன்னமாகி இருந்த அனைத்து உறுப்பினர்களின் ஏகமனதான ஆதரவோடு அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேறியது.

No comments