Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Saturday, July 5

Pages

Breaking News

கடலில் அடித்து செல்லப்பட்ட இரு மாணவர்கள் சடலங்களாக மீட்பு!


வத்தளை கடலில் நீராடிய மாணவர்களில் இருவர் கடலில் அடித்து செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர். 

மஹர குமார வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்கும் , ருவிந்த புன்சரா (வயது 15) மற்றும் சஞ்சித சதகெலும் (வயது 15) ஆகிய இரு மாணவர்களே உயிரிழந்துள்ளனர். 
 
வத்தளை பிரித்திபுர கடற்கரையில் இன்றைய தினம் நான்கு மாணவர்கள் நீராடியுள்ளனர். அதில் இரண்டு மாணவர்கள் கடலில் அடித்து செல்லப்பட்ட நிலையில் , பிரதேச வாசிகள் அது தொடர்பில் கடற்படையினருக்கு அறிவித்தனர். 
 
அதனை அடுத்து கடற்படையினர் தேடுதலை முன்னெடுத்த நிலையில் , இரு மாணவர்களும் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.