Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியமையால் மேல் தளத்திலிருந்து பாய்ந்த பெண்!


கோப்புப்படம் 

எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியதால் , இரண்டாவது தளத்தில் இருந்து கீழே குதித்த பெண் காயமடைந்துள்ளார். 

குருவிட்ட பதுஹேன பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

மொனராகலை பகுதியை சேர்ந்த குறித்த யுவதி , வேலை நிமிர்த்தம் பதுஹேன பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில் இரண்டாவது தளத்தில் உள்ள  வாடகை வீட்டில் வசித்து வருகின்றார். 

அவர் வழமை போன்று சமையலில் ஈடுபட்டிருந்த போது , திடீரென எரிவாயு அடுப்பு வெடித்தமையால் பீதியடைந்து இரண்டாவது தளத்தில் இருந்து ஜன்னல் வழியாக வெளியே பாய்ந்துள்ளார். 

அதனால் கீழே விழுந்து கால்களில் காயமடைந்த குறித்த பெண் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , குருவிட்ட பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

No comments