Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பரிகார பூஜை செய்ய சென்ற வீட்டில் நகைத் திருட்டு - பெண் பூசாரி கைது!


தாலிக்கொடி , தங்கசங்கிலி உட்பட  சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான  ஏழேகால் பவுண் தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் பெண் பூசாரியும் , அவரது ஆண் நண்பரும் 14 நாட்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

மட்டக்களப்பு  காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள தாழங்குடா பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை(7)  பலவருடமாக குழந்தை இல்லாத தம்பதியினர் தமது வீட்டை காவல் செய்வதற்கான சடங்கு(பரிகார)  பூஜை ஒன்றை செய்வதற்காக கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் பூசாரியான சந்தேக நபரை வரவழைத்துள்ளார்.

அவ்வாறு வரவழைக்கப்பட்ட அந்த பெண் பூசாரி குறித்த வீட்டில் அன்று  இரவு தங்கவைக்கப்பட்டு  பூஜை  நடவடிக்கை நிறைவடைந்த பின்னர் மறுநாள் அதி காலை  அங்கிருந்து சென்றுள்ளார்.

இந்த நிலையில் பூஜை நிறைவடைந்த பின்னர் வீட்டின் அலுமாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த   6 பவுண் நிறை கொண்ட தாலிக்கொடி ஒரு பவுண் நிறை கொண்ட தங்க சங்கிலி, கால் பவுண் மோதிரம் என்பவை காணாமல் போனதை அறிந்த  வீட்டு உரிமையாளர்   காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இம்முறைப்பாட்டிற்கமைய   பொலிசார் விசாரணையை மேற்கொண்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை  கொக்கட்டிச்சோலையை சேர்ந்த 31 வயதுடைய பெண்பூசாரியையும் , 20 வயதான அவரது ஆண் நண்பரையும் பொலிஸார் கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் விசாரணையின் போது  களவாடப்பட்ட  தங்க ஆபரணங்கள் தனியார் அடகு நிறுவனம் ஒன்றில் ஈடு செய்யப்பட்டிருந்ததுடன்  ஏனைய  நகைகள்  தங்க நகைகடைகளில் விற்கப்பட்ட நிலையில் பொலிஸாரினால் மீட்கபப்டது.

இதேவேளை கொள்ளைச்சம்பவத்தில் கைதாகிய பெண் பூசாரி சந்தேக நபர் கொக்கட்டிச்சோலை, களுவாஞ்சிக்குடி ,  அக்கரைப்பற்று பொலிஸ் நிலையங்களில் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளதுடன் வழக்கு தொடர்ந்து இடம்பெற்றுவருவதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தில் கைதான பெண் சந்தேக நபரும் அவரது ஆண் நண்பரையும் மட்டக்களப்பு நீதிவான்  நீதிமன்றில் பொலிஸார் முன்னிலைப்படுத்திய நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் 14 நாட்கள்  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த பெண்ணினால் , பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருப்பின்  பொலிஸ் நிலையத்தினை தொடர்பு கொள்ளுமாறு  பொலிஸார் கேட்டுள்ளனர்.

No comments